IND vs NZ 2024: இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2024 டெஸ்ட் தொடர், இரு அணிகளுக்குமான முக்கியமான தொடராகும். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது, மற்றும் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
- ரோஹித் சர்மா (கேப்டன்)
- ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்)
- விராட் கோலி
- சுப்மன் கில்
- யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- கே எல் ராகுல்
- சர்ஃபராஸ் கான்
- ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)
- துருவ் ஜூரல்
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- ரவீந்திர ஜடேஜா
- அக்சர் படேல்
- குல்தீப் யாதவ்
- முகமது சிராஜ்
- ஆகாஷ் தீப்
நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்:
- டாம் லாதம் (கேப்டன்)
- டாம் ப்ளன்டெல் (விக்கெட் கீப்பர்)
- மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்)
- மார்க் சாப்மேன்
- டெவோன் கான்வே
- மேட் ஹென்றி
- டேரில் மிட்செல்
- வில் ஓ’ரூர்க்
- அஜாஸ் படேல்
- கிளென் பிலிப்ஸ்
- ரச்சின் ரவீந்திரா
- மிட்செல் சான்ட்னர்
- பென் சியர்ஸ்
- இஷ் சோதி (2வது மற்றும் 3வது டெஸ்ட் மட்டும்)
- டிம் சவுத்தி
- கேன் வில்லியம்சன்
- வில் யங்
IND vs NZ டெஸ்ட் போட்டிகள் அட்டவணை:
- முதல் டெஸ்ட் – பெங்களூரு, அக்டோபர் 16 முதல் 20 வரை
- இரண்டாவது டெஸ்ட் – புனே, அக்டோபர் 24 முதல் 28 வரை
- மூன்றாவது டெஸ்ட் – மும்பை வான்கடே, நவம்பர் 1 முதல் 5 வரை
போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு துவங்குகின்றன.
நேரலை மற்றும் பார்வை விருப்பங்கள்:
இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி சேனலில் காணலாம். மொபைல் மற்றும் இணையதளங்களில் பார்க்க விரும்புபவர்கள் ஜியோ சினிமா ஆப்பில் முழு போட்டியையும் பார்க்கலாம். ஜியோ சினிமாவில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வர்ணனை செய்யப்படும்.