சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மீட்பு வீரர்கள் அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடனடியாக மாயமானவர்கள் தேடி மீட்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன், அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் புவியியல் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் லி கியாங் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக மலையிலிருந்து பெரிய பாறைகள் அடிக்கடி உருண்டு வந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.