நடிகர் அஜித் குமார் டுபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றார். இந்த தொடரில் போர்ஸ்சே 992 பிரிவில் 3வது இடத்தை அஜித்தின் அணி பிடித்தது.
இதன்பின்னர், போர்ச்சுகலில் நடைபெறும் கார் ரேஸில் அஜித் கலந்துகொள்ள உள்ளதுடன், இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கி உள்ளது.
இது தொடர்பாக தெரிவித்துள்ளது அஜித், “இன்றைய பயிற்சியின்போது எனது கார் விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான காரை குழுவினர் சரி செய்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.