நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படம் இன்று வெளியாகும் நிலையில் திரையரங்குகளில் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தில், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்ட நிலையில் இன்று ‘விடாமுயற்சி’ திரையரங்குகளில் வெளியாகின்றது.
இந்த நிலையில், அதிகாலை முதலே திரையரங்குக்கு வந்த ரசிகர்கள் ஆடி, பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
2023-ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் ‘துணிவு’ வெளியானதுடன், 2 ஆண்டுகளாக அஜித் படம் வெளியாகாவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.