நடிகர் விஷாலுக்கு மார்க் ஆண்டனி படம் திருப்பு முனையை ஏற்படுத்தியதுடன், 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்த சுந்தர் சியின் மத கஜ ராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது.
திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் தற்போது 47 வயதாகும் விஷால், கடந்த 2019 ஆம் ஆண்டு அனிஷா ரெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்தார்.
எனினும், 6 மாதங்கள் கழித்து அவர்களது திருமணம் ரத்தானதுடன், விஷால் பல நடிகைகளுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில், விஷாலும் நடிகை அபிநயாவும் காதலிப்பதாக தகவல் வெளியானது.
கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டதுடன், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு மனைவியாக அபிநயா நடித்திருந்தார்.
இதன் காரணமாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இருவரும் காதலிப்பதால் தான் மார்க் ஆண்டனி படத்தில் அபிநயாவிற்கு வாய்ப்பும் கிடைத்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகாலமாக குழந்தைபருவ நண்பருடன் உறவில் இருப்பதாகவும், இனிமேல் இது போன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி விஷால் உடனான வதந்திக்கு அபிநயா முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால், 15 ஆண்டுகாலமாக உறவில் இருக்கும் அந்த காதலன்பற்றி அபிநயா எதுவும் கூறவில்லை.