இங்கிலந்தின் டெவொன் மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்யும் ஊழியர் வட்டமான முட்டையொன்றை கண்டுபிடித்தார்.
அந்தப் பண்ணையில் 3 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்யும் அலிசன் கிரீன், 42 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகளை பராமரித்து இருக்கின்றார்.
ஆனால், இதுவரை இது போன்ற வட்டமான முட்டையைப் பார்த்ததே இல்லை என்று கூறும் கிரீன் அந்த முட்டையை ஏலத்திற்கு அனுப்ப எண்ணியுள்ளார்.
முட்டையை ஏலத்தில் விற்கும் பணத்தை பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் அமைப்புக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.