அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்பின் பதவியேற்பு நிகழ்வு உள்ளரங்கில் இடம்பெறவிருக்கிறது.
அமெரிக்கத் தலைநகரில் தற்போது நிலவும் ஆபத்தான குளிர் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்னர், 1985ஆம் ஆண்டில்தான் அதிபரின் பதவியேற்புச் நிகழ்வு உள்ளரங்களில் நடந்தது
டிரம்ப்பின் பதவியேற்புச் சடங்கில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், அனுமதிச் சீட்டு பெற்ற ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு பாதுகாப்பு வழங்க 25,000 காவல்துறையினரும், ராணுவத்தினரும் தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.