Friday, April 4, 2025
Homeகிரிக்கெட்இலங்கை கிரிக்கெட்ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்

ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீரர்

ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக 7ஆவது இடத்திலிருந்த தீக்சன, 663 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் வீரர் ரஷீத் கான் முதலிடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories