பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது.
இந்தநிலையில் இந்திய அணியில் கேப்டன் பதவிக்காக ஏற்பட்ட சண்டைதான் இந்த தோல்விக்கு காரணம் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
“சில வதந்திகள் வந்ததை நானும் அறிவேன். நெருப்பு இருக்கும்போது புகையும். சொந்த ஊரில் விளையாடுவது எளிது. வெளிநாட்டில் விளையாடும்போது ஒற்றுமையான அணி முக்கியம்.
கடந்த சில வாரங்களாக இந்திய அணி தங்களுக்குள்ளேயே நம்பிக்கையை இழந்தார்கள். அப்படி நீங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழக்கும்போது தோல்வியின் பக்கத்தில் இருப்பீர்கள்.
2 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் நாங்கள் தோற்றோம். தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் 3 – 0 என்ற கணக்கில் தோற்றோம். அந்த சமயங்களில் எங்கள் அணியில் ஒற்றுமை இல்லை.
ஒரு அணி உண்மையாகவும் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் தோல்வியை சந்தித்தால் கூட உங்களுடைய அணி நன்றாக இருக்கும்” என்றார்.