திருமணத்துக்கு மறுத்த வாலிபரை கத்தியால் குத்திய காதலி

கத்தியால் குத்திய காதலி

கர்நாடக மாநிலத்தில் மனுகுமார் (வயது 25) என்ற வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த பவானி (வயது 25) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

உணவகம் ஒன்று வைத்து நடத்தி வரும் மனுகுமாரும் அந்த பெண்ணும் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மனுகுமார் தனது காதலியை தவிர்த்து வந்துள்ளதுடன்,திருமணக் குறித்துப் பேசினாலே தட்டிக் கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் இருவரும் ஒரு தனி அறையில் அமர்ந்து திருமணம் குறித்து பேசியுள்ளனர். ஆனால், அப்போதும் அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பவானி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது காதலனை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்த மனுகுமாரின் நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பவானியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *