ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் (Ivory Coast) பல ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த பிரான்ஸ் ராணுவ வீரர்கள் விரைவில் வெளியேற்றப்பட உள்ளதாக ஐவரி கோஸ்ட் தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக அங்கு முகாமிட்டிருந்த பிரான்ஸ் வீரர்கள் விரைவில் வெளியேற்றப்பட உள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலசானே ஔட்டாரா (Alassane Ouattara) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தங்கள் நாட்டு ராணுவம் தற்போது திறம்பட செயலாற்றும் நிலையில் உள்ளதால், பிரான்ஸ் வீரர்களை வெளியேற்ற ஐவரி கோஸ்ட் அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
ஐவரி கோஸ்டின் ஜனாதிபதி திடீரென இந்த முடிவை எடுத்துள்ளதுடன், வேறு எந்தக் காரணத்தையும் வெளியிடவில்லை.