பிரான்ஸ் வடக்கு பகுதில் அமைந்துள்ள A16 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
61 வயதுடைய பெண் ஒருவர் வீதியின் எதிர் திசையில் காரில்நீண்ட தூரம் பயணித்த நிலையில், வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜனவரி 2 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் குறித்த பெணும், எதிரில் பயணித்த காரில் வந்த 52 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 46 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.