Monday, April 14, 2025
Homeஉலகம்கனடாகனடாவின் புலம்பெயர்தல் விதிகளில் வரவுள்ள மாற்றங்கள்

கனடாவின் புலம்பெயர்தல் விதிகளில் வரவுள்ள மாற்றங்கள்

இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே பல்வேறு நாடுகள் தங்கள் புலம்பெயர்தல் சட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன.

அந்த வகையில், புலம்பெயர்தல் விதிகளில் கனடா அரசு மாற்றங்களை செய்யவுள்ளது.

2025ஆம் ஆண்டு முதல் நிரந்தர குடியிருப்பு அனுமதி இலக்குகளை குறைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, மொத்தம் 105,000 சேர்க்கைகள் குறைக்கப்படும் என கனடா அரசு தெரிவித்துள்ளதுடன், அதில் தற்காலிக குடியிருப்பு அனுமதியும் உள்ளடங்கும்.

அத்துடன், சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளும் 2025ஆம் ஆண்டில் 10 சதவீதம் குறைக்கப்பட உள்ளது.

வீட்டு வசதியை மேம்படுத்துவதற்காகவும், வேலையின்மை விகிதத்தை குறைப்பதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும் இந்த நடவடிக்கைகளை கனடா எடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories