பிரிட்டன் தலைநகரான லண்டனில் இந்தியாவை சேர்ந்த உயர்ந்த சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் வீடு வாங்கி முதலீடு செய்து வருகின்றனர்.
தொழிலதிபர்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை விருப்பமான தெரிவாக லண்டன் ரியல் எஸ்டேட் சந்தை மாறியுள்ளது.
பெரும்பாலும் இவர்கள் தங்களது குழந்தைகள் மேற்படிப்புக்காக லண்டனை தேர்வு செய்து அங்குள்ள ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர்.
லண்டனில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டின் விலை 3.2 கோடி ரூபாயாக உள்ளதுடன், மூன்று படுக்கையறை கொண்ட வீடு 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்படுகின்றது.
பெரும்பாலான இந்தியர்கள் மேஃபேர், மேரிலபோன், ஆக்ஸ்போர்ட் சர்க்கஸ் ஆகிய இடங்களில் தான் ரியல் எஸ்டேட் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு தொழில் விரிவாக்க வாய்ப்புகளை லண்டன் வழங்குவதுடன், சொத்து மதிப்பு நிலையாக உயர்ந்து வருகிறது. மேலும் அங்குள்ள வரி விதிப்பு முறை, உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவையால் பெரும்பாலான இந்தியர்கள் லண்டனை நோக்கி படையெடுகின்றனர்.
பெரும்பாலான இந்தியர்கள் இங்கே வாடகை வருமானம் ஈட்டும் நோக்கிலும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுடன், உயர்ந்த சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களுக்கு லண்டனில் வீடு இருப்பது என்பது கௌரவமாக பார்க்கப்படுகிறது.