இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் , 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் செப்டம்பர் 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அவர் விளையாட உள்ளார்.
உத்தரபிரதேசத்தின் முகமது அமான் அணியின் கேப்டனாக செயற்பட உள்ளதுடன், செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் தொடங்கும் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
இதற்கான இந்திய அணிக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சோஹம் பட்வர்தன் கேப்டனாக செயற்பட உள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான சமித் டிராவிட், பெங்களூருவில் நடைபெற்று வரும் KSCA மகாராஜா T20 கோப்பையில் மைசூர் வாரியர்ஸ் அணியில் விளையாடுகின்றார்.
இதுவரை 7 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள இவர், அதிகப்ட்சமாக 33 ரன்கள் உள்ளடங்களாக 82 ரன்கள் எடுத்துள்ளார்.
7 இன்னிங்ஸ்கள் விளையாடி வெறும் 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள சமித் டிராவிட்டிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்ததை பற்றி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சாடி வருகின்றனர்.