டெஸ்ட் வரலாற்றில் புது சகாப்தம் படைத்த ஜோ ரூட் – 147 ஆண்டில் முதன்முறை!

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜோ ரூட் டெஸ்ட் வரலாற்றில் புது வரலாறு படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியிருந்தார்.

இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சிலும் தனி ஆளாக போராடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். அவர் 103 ரன்கள் எடுத்து கடைசி ஆளாக அவுட்டானார்.

ஒரே டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தியதுடன், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்து விளாசியவர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார்.

டெஸ்ட் வரலாற்றில் புது சகாப்தம் படைத்த ஜோ ரூட்

147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக தனது 34வது சதத்தை நேற்று விளாசி இந்த புதிய சகாப்தத்தை ஜோ ரூட் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 33 சதங்களுடன் தன்வசம் வைத்திருந்தார்.

மொத்தம் 145 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜோ ரூட், மொத்தம் 1455 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 265 இன்னிங்சில் பேட் செய்து 34 சதங்கள், 5 இரட்டை சதங்கள், 64 அரைசதங்களுடன் 12 ஆயிரத்து 377 ரன்களை குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் வீரர்களில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரராக ஜோ ரூட் காணப்படுகின்றார்.

171 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 16 சதங்களும், 39 அரைசதங்களுடம் விளாசி 6 ஆயிரத்து 522 ரன்கள் எடுத்துள்ளதுடன், 32 டி20 போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 893 ரன்களும் எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *