Monday, March 10, 2025
Homeஉலகம்யானை கூட்டத்தின் மீது மோதித் தடம் புரண்ட ரயில்

யானை கூட்டத்தின் மீது மோதித் தடம் புரண்ட ரயில்

இலங்கையில் யானைகள் மீது மோதித் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதுடன், அந்த ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எனினும், 6 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்தில் தப்பிய 2 யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஹபரனா வனவிலங்குக் காப்பகத்திற்கு அருகே ரயில் சென்றுகொண்டிருந்த நிலையில், ரயில் தடத்தைக் கடந்து சென்ற யானைகள் மீது ரயில் மோதியது.

இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்படுவதுடன், யானைகள் தேசிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகின்றன.

 

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories