சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
முன்னதாக, விராட் கோலி 221 இன்னிங்ஸிலும் சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸிலும், பாண்டிங் 286 இன்னிங்சிலும், கங்குலி 288 இன்னிங்சிலும் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், ரோகித் சர்மா 261 இன்னிங்சில் எட்டி உள்ளார்.
இதேவேளை, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் ரோகித் சர்மா செய்துள்ளார்.
ரோகித் சர்மா பத்தாயிரம் ரன்னில் இருந்து 11 ஆயிரம் ரன்களை தொட ரோகித் சர்மா வெறும் இருபது இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார்.