Monday, March 10, 2025
Homeஉலகம்நீதிமன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ

நீதிமன்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ

புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்துக்குள் இன்று(19) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சஞ்சீவ சமரக்கோன் எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபரான கணேமுல்ல சஞ்சீவ வழக்கு விசாரணைக்காக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டு சாட்சிக்கூண்டில் நிறுத்தப்பட்ட போதே சுட்டுக் கொல்லப்பட்டார்.

சட்டத்தரணி போன்று வேடமிட்டு நீதிமன்றுக்குள் இருந்த சந்தேக நபர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

நீதிமன்றத்தில் கைவிடப்பட்ட நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories