விக்ரமன் இயக்கத்தில் புது வசந்தம், மாதவன், ஜோதிகா நடிப்பில் பிரியமான தோழி போன்ற ஆண் பெண் நட்பை பேசி வெற்றி பெற்ற படங்கள் வரிசையில், ‘2K லவ் ஸ்டோரி’ படத்தை தந்துள்ளார் சுசீந்தரன்.
கார்த்தியும், மோனிகாவும் சிறு வயது முதல் நண்பர்களாக பழகி வருகிறார்கள். கல்லூரியில் படித்து விட்டு விளம்பர படங்கள் தயாரிக்கின்றனர். பவித்ரா என்ற பெண் கார்த்தியை காதலிப்பதாக சொல்கிறார்.
தோழி மோனிகாவிடம் கலந்து பேசி விட்டு பவித்ராவுக்கு ஒகே சொல்கிறார் கார்த்தி. எதிர்பாராத ஒரு விபத்தில் விதமாக பவித்ரா இறந்து விடுகிறார். அனைவரும் மோனிகாவும், கார்த்தியும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க இந்த 2K கிட்ஸ் என்ன முடிவு செய்தார்கள் என்பதுதான் மீதிக் கதை.
பிக்பாஸ் பாலாஜி நடித்த ‘பயர்’ விமர்சனம் – படம் எப்படி இருக்கிறது?
கவிதை போல் தொடங்கும் படத்தை அடுத்து வரும் காட்சிகள் இந்த வீணடித்து விட்டன. மிக சாதாரணமாக உயிரோட்டமே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன.
கதாபாத்திரம் இப்படித்தான் இருக்க போகிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. இரண்டாம் பாதி கல்யாண வீட்டில் கலாட்டா, யாரை திருமணம் செய்து கொள்வது என்ற குழப்பம் என சுவாரசியம் இல்லை.
மோனிகாவாக நடிக்கும் மீனாக்ஷி கோவிந்தராஜன் மிக நன்றாக நடித்திருக்கிறார். உணர்ச்சிகளை சரியாக கடத்துகிறார். ஹீரோ ஜெகவீராவுக்கு நடிப்பு பயிற்சி தேவை. இமானின் இசையில், ஷோபி பால்ராஜ் மாஸ்டரின் நடன வடிவமைப்பு சிறப்பு.
2k இளைஞர்களின் காதலையும், நட்பையும் சரியாக புரிந்து கொண்டு வலுவான திரைக்கதை அமைத்திருந்தால் இந்த 2K லவ் ஸ்டோரி நன்றாக வந்திருக்கும்.