2ஆவது முறையாக அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவது, இறக்குமதி பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பது போன்ற நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
குறிப்பாக டிரம்பின் உத்தரவின்பேரில் கைகளில் விலங்குடன் 104 பேரை நாடு கடத்திய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு எலான் மஸ்க், அமெரிக்க புலனாய்வுப்பிரிவு தலைவர் துளசி கப்பாட் ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.
தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும் வெள்ளை மாளிகையில் மோடி சந்தித்தார். வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி, அவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.