Monday, March 10, 2025
Homeசினிமாஅஜித்தின் அடுத்தபட இயக்குநர் இவர் தானா? காத்திருக்கும் ரசிகர்கள்!

அஜித்தின் அடுத்தபட இயக்குநர் இவர் தானா? காத்திருக்கும் ரசிகர்கள்!

அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தில் அஜித்தை இயக்க போவது யார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இயக்கி வரும் குட் பேட் அக்லி படம் இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தை இயக்க போகும் இயக்குநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏகே 64 படத்திற்காக இரண்டு இயக்குநர்கள் அதிகம் பரிந்துரைக்கப்பட்டு வருவதாகவும், கார்த்திக் சுப்புராஜ், ஏகே 64 படத்தை இயக்குவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை ஏகே 64 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது உறுதியானால், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது.

அஜித் படத்தை இயக்கப் போகும் இயக்குநர்களின் பெயர்களில் பல வருடங்களாக பேசப்பட்டு வருபவர் விஷ்ணுவர்த்தன். அஜித்தின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான பில்லா, பில்லா 2 படங்களை இயக்கியவர்.

இவர் அஜித்தை மீண்டும் இயக்குவாரா? பில்லா 3 வருமா என பல ஆண்டுகளாக கேள்வி உள்ளது. இதனால் ஏகே 64 படத்தை இவர் இயக்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மூன்றாவதாக விக்னேஷ் சிவனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே விடாமுயற்சி படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டதுடன், கடைசி நிமிடத்தில் மகிழ் திருமேனி இயக்குவது முடிவானது.

அதற்கு பிறகு ஏகே 63 படத்தையாவது விக்னேஷ் சிவன் இயக்குவார் என சொல்லப்பட்ட நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பு சென்றுவிட்டது. இரண்டு முறை மிஸ் ஆகி விட்டதால் ஏகே 64 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories