மலையாள நடிகையான கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா ஆகியோர் நடித்த ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படம் கான்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ஃப்ரி விருதை வென்றது. அத்துடன், கோல்டன் குளோப் விருதுக்கும் நாமினேட் ஆனது.
இந்த நிலையில், கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா இருவரும் இங்கிலாந்தின் பிரபல மேகஸினுக்காக கட்டிப்பிடித்தபடி நெருக்கமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
மலையாள நடிகையான கனி குஸ்ருதி தமிழில் பிசாசு, பர்மா, சிவபுராணம், ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான All We Imagine As Light திரைப்படம் உலகளவில் கொண்டாடப்பட்டது.
நடிகை திவ்ய பிரபா மற்றும் கனி குஸ்ருதி இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
மலையாள நடிகையான திவ்ய பிரபாவும் கனி குஸ்ருதியும் கவர்ச்சியாக உடையணிந்து கொடுத்துள்ள போஸ் இணைத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல புகைப்படக்கலைஞர் இந்திரா ஜோஷி மும்பையில் இந்த போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.