அமெரிக்காவின் அரிஸோனாவில் தனியார் விமானமொன்று மற்றொரு விமானத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விமான நிலையத்தில் தரையிறங்கும்போது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.40 மணியளவில் விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தரையிறங்கிய தனியார் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று தனியார் வளாகத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு விமானத்தின்மீது மோதியது.
அமெரிக்க வரலாற்றில் கடந்த இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து நேர்ந்துள்ள 3 மோசமான விமான விபத்துகளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.