ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று(21) நடைபெறும் 39ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.
இதில் டாஸ் வென்ற ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 5இல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
அத்துடன், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3இல் வெற்றியும், 4இல் தோல்வியும் அடைந்துள்ளது.