Monday, April 21, 2025
Homeகிரிக்கெட்ஐ.பி.எல்சிஎஸ்கே அணி பற்றி பேசி சோர்வடைந்து விட்டேன்- பொல்லார்ட்

சிஎஸ்கே அணி பற்றி பேசி சோர்வடைந்து விட்டேன்- பொல்லார்ட்

மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில், முதலில் விளையாடிய சென்னை 176 ரன்கள் எடுத்த நிலையில், களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிப்பெற்றமை குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில்:- சிஎஸ்கே அணியை பற்றி சொல்லி சொல்லி மிகவும் சோர்வடைந்து விட்டேன். இந்தப் போட்டியில் நாம் வெல்ல வேண்டும் என மீட்டிங்கின் போது, மும்பை இந்தியன்ஸ் வீரர்களிடம் சொன்னேன். அதன்படி அணிக்கு வெற்றியை தேடி தந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” என்றார்.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories