ஐபிஎல் 2025 – சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியதுடன், ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். ரிக்கல்டன் 13 ரன்களில் வெளியேறினார். வில் ஜேக்ஸ் 11 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் சூர்யகுமார் யாதவ் , திலக் வர்மா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையும் படியுங்கள்: திடீரென மாற்றப்பட்ட பேட்டிங் ஆர்டர்… 3ஆவது இடத்தில் களமிறங்கியது ஏன்? ருதுராஜ் விளக்கம்!
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்ததுடன், 155 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி 2 ரன்களில் அவுட் ஆனார்.
ருதுராஜ் கெய்க்வாட் 53 ரன்களில் வெறியேறினார். சிவம் துபே 9 ரன்களும், தீபக் ஹூடா 3 ரன்களும், சாம் கர்ரன் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களில் வெறியேறினார். ராசின் ரவீந்திரா 65 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் நின்றார்.
இறுதியில் சென்னை அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு இழந்து 158 ரன்கள் எடுத்ததுடன், சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
ஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் முன்னேற்றம் பெற்றனர்!