இலங்கையில் யானைகள் மீது மோதித் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதுடன், அந்த ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும், 6 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த விபத்தில் தப்பிய 2 யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஹபரனா வனவிலங்குக் காப்பகத்திற்கு அருகே ரயில் சென்றுகொண்டிருந்த நிலையில், ரயில் தடத்தைக் கடந்து சென்ற யானைகள் மீது ரயில் மோதியது.
இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்படுவதுடன், யானைகள் தேசிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகின்றன.