Sunday, March 9, 2025
Homeஉலகம்100 ஆண்டுக்கு பின்னர் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரச கல்லறை

100 ஆண்டுக்கு பின்னர் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரச கல்லறை

எகிப்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரச கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், கடைசியாக 1922ஆம் ஆண்டில் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது .

இந்தக் கல்லறை எகிப்தின் 18ஆம் அரச வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் துட்மோஸுக்குச் சொந்தமானது என அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கல்லறையில் அரசர், அவரது மனைவி ராணி ஹெட்ஷெப்சுட்டின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுள்ளனர்.

நீல நிற எழுத்துகள் அடங்கிய களிமண், மஞ்சள் நட்சத்திரங்கள், சமயக் குறிப்புகள் போன்றவையும் கல்லறையில் காணப்பட்டன.

கல்லறை முறையாகப் பராமரிக்கப்படாததால் அதில் இருந்த பல பொருள்கள் அகற்றப்பட்டிருப்பதாகவும் அவற்றை மீட்கும் பணி தொடர்வதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories