நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள கவுண்டமணி நடிப்பில் வெளியாகி உள்ள ஒத்த ஓட்டு முத்தையா படத்தை பற்றி பார்க்கலாம்.
தேர்தலில் நின்று ஒரே ஒரு ஒட்டு வாங்கியதால் ஒத்த ஒட்டு முத்தையா என அழைக்கப்படும் கவுண்டமணி, மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றார்.
அத்துடன், இடை தேர்தலில் சுயேச்சையாக நிற்கும் முத்தையா குடும்பத்தையும், அரசியலலையும் எப்படி எதிர் கொண்டார் என்பது தான் ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதை.
கவுண்டமணியிடம் நிறைய எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. காமெடி என்ற பெயரில் கவுண்டமணி பேசுவதெல்லாம் எடுபடவில்லை.
2K லவ் ஸ்டோரி விமர்சனம்! – படம் எப்படி இருக்கிறது?
80 வயதை கடந்த கவுண்டமணி நடிக்க முயற்சி செய்ததற்கு பாராட்டலாம். சமாதி முன் தியானம் செய்வது, இது வாய்ப்பில்லை ராஜா என சொல்வது போன்ற பல காட்சிகள் அரசியலை நினைவு படுத்துகின்றன.
யோகிபாபு உட்பட பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும், நகைச்சுவைக்கு முயற்சி செய்யவில்லை. பல காட்சிகள் முடியலடா சாமி என கவுண்டமணி பழைய படம் ஒன்றில் சொல்லிய வசனத்தை நினைவு படுத்துகின்றது.
கவுண்டமணியின் சில பழைய வசனங்கள் வரும் போது அவரது ‘அந்தப் படத்தை’ நினைத்து மட்டும் லேசாக சிரிப்பு வருகிறது.
ஒத்த ஓட்டு முத்தையா வெற்றிப்பெற முயற்சிக்கவில்லை