நடிகை இலியானா தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் படங்களில் நடிக்க துவங்கியதுடன, போர்ச்சுகீசிய படங்களிலும் நடித்து வருகிறார்.
திருமணமாகாமலேயே கர்ப்பமாக இருந்த இலியானாவிற்கு கடந்த 2023ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்ததுடன், தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய இரண்டாவது கர்ப்பத்தை அவர் அறிவித்துள்ளார்.
அதாவது, கடந்த சில தினங்களாக இலியானா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து, இலியானா இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.
மைக்கேல் டோலனை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ள இலியானா, தற்போது தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கான கர்ப்பம் குறித்து மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவில் பஃப் கார்ன் ஸ்நாக்சின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள இலியானா, நீங்கள் கர்ப்பமாக இருப்பதை சொல்லாமல் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.