அமெரிக்காவின் நியூயார்க்கில் வாழும் 104 வயதுப் பெண்ணுக்கு சிறையில் ஒரு நாளைக் கழிக்க வேண்டும் என்பது வித்தியாசமான ஆசை.
அதை அந்நாட்டு காவல்துறை நிறைவேற்றியது.
Loretta Chamberlain சிறையின் சீர்திருத்தக் கூடத்தைச் சுற்றிப் பார்த்துள்ளார்.
அத்துடன், சிறைக் கைதிகள் எப்படிப் படமெடுக்கப்படுவார்களோ அதுபோலவே சேம்பர்லெனுக்கும் படமெடுக்கப்பட்டு சிறிது நேரம் அவர் சிறையில் வைக்கப்படுகிறார்.
கைவிலங்குகள், மோப்ப நாய்கள் முதலியனவும் அவருக்கு காட்டப்படுகின்றன.
சிறைச்சாலைக்குச் சென்றது சிறந்த பிறந்தநாளாக அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.