அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மோட்டார் வாகனங்களுக்கு ஏப்ரல் 2 ஆம் திகதி புதிய வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை (14) செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியாவில் இயங்கும் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் அடுத்தடுத்து வரிவிதிப்புகளை அறிவிப்பது, நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும்.
அமெரிக்காவின் பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளான கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே டிரம்ப் 25 சதவீத வரிவிதிப்பை அறிவித்து, பின்னர் மார்ச் வரை அதை நிறுத்தி வைத்துள்ளார்.