Sunday, March 9, 2025
Homeஉலகம்அமெரிக்காடிரம்ப்பின் தயவால் மீண்டும் அமெரிக்காவில் தலைதூக்கிய டிக்டாக்

டிரம்ப்பின் தயவால் மீண்டும் அமெரிக்காவில் தலைதூக்கிய டிக்டாக்

டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏப்ரல் 5ஆம் தேதி வரை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தாமதப்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில் கூகுல் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் டிக் டாக் மீண்டும் இடம்பெற்றுள்ளது.

170 மில்லியன் அமெரிக்க பயனீட்டாளர்கள் பயன்படுத்தும் டிக்டாக் செயலி, சீனாவைத தளமாகக் கொண்ட பைட்டான்சுக்குச் சொந்தமானது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறி அச்செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டதுடன், ஜனவரி 19ஆம் தேதிக்குள் அதை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றுவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால் அமலாக்கத் தடையை 75 நாள் தாமதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

டிக் டாக் செயலியை பயன்படுத்த அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று டிரம்ப் நிர்வாகம் உறுதியளித்துள்ளதால் பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து கூகல், ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து புதிய பயனீட்டாளர்கள் டிக் டாக் செயலியை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories