‘பிரேமம்’ படம் மூலமாக அறிமுகமான மடோனா செபாஸ்டியன் நடிக்கும் “ஹார்ட்டின்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
காதலும் கடந்து போகும், கவண், ப பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற பல தமிழ் படங்களில் மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார். லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார்.
சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை திரைப்படம் ‘ஹார்ட்டின்’. அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார்.
பிரபல நடிகர்கள் இதர முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஹார்ட்டின் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம்.
சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 2025 கோடை விடுமுறைக்கு ‘ஹார்ட்டின்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, ‘ஹார்ட்டின்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.