கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் ‘பஞ்சுருளி’ என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. இதில் ரிஷப் ஷெட்டி ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘காந்தாரா சாப்டர் 1’ என்று பெயரிட்டு உள்ளதுடன், அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது.
“காந்தாரா” படத்தின் மூலமாக கர்நாடகா மற்றும் கேரளா மாநில எல்லைப்பகுதியில் உள்ள பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது
இந்தநிலையில், மங்களூரில் உள்ள ஜரந்தய தெய்வா பஞ்சுருளி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்துள்ளார்.