இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. பதும் நிஷாங்க 4 ரன்னிலும், அவிஷ்க பெர்னாண்டோ 1 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், 5ஆவது வீரராக களம் இறங்கிய கேப்டன் சரித் அசலங்கா அதிரடி காட்டினார்.
ஜனித் லியனாகே (11), துனித் வெலாலாகே (30) ஆகியோருடன் இணைந்து அசலங்கா 71 பந்தில் அரைசதம் கடந்தார். அதிரடியாக விளையாடிய நிலையில் 126 பந்தில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியின் ஸ்கோர் 214 ரன்னாக இருந்த நிலையில், கடைசி விக்கெட்டும் அதே ரன்னில் இழக்க இலங்கை 46 ஓவரில் 214 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.
இதனையடுத்து, இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீக்ஷனா 9.5 ஓவரில் 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வெலாலாகே, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.