ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை பாராட்டும்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
இருவரும் திருமணம் செய்துகொண்டதுடன், யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஐஸ்வர்யாவுக்கு இயக்குநராகும் ஆசை இருப்பதை தெரிந்துகொண்ட தனுஷ் 3 படத்தில் ஹீரோவாக நடித்தார்.
அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவர் இயக்கிய வை ராஜா வை படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.
திடீரென இருவரும் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர். தனுஷை பிரிந்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் லால் சலாம் படம் தியேட்டரில் வெளியானது.
ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் செய்த படம் படுதோல்வியை சந்தித்தது. இன்றுவரை லால் சலாம் ஓடிடியிலும் ரிலீஸாகவில்லை.
தனுஷும், ஐஸ்வர்யாவும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் கடந்த வருடம் விவாகரத்தை கொடுத்துவிட்டது.
எனவே தனுஷும், ஐஸ்வர்யாவும் சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
சித்தார்த்திடம் அவர் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்ட போதும், படத்தை தயாரிப்பதற்கு யாரும் முன்வரவில்லையாம். இதனால், தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தை தயாரிப்பதற்கு முடிவு செய்துள்ளாராம்.