Sunday, March 9, 2025
Homeசினிமாகைவிட்ட விடாமுயற்சி.. 800 கோடிக்கு ஆப்பு.. விஜய் மகன் படத்தின் கதி என்ன?

கைவிட்ட விடாமுயற்சி.. 800 கோடிக்கு ஆப்பு.. விஜய் மகன் படத்தின் கதி என்ன?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் விமர்சன ரீதியாக கடும் சறுக்கலை சந்தித்தது. வழக்கமான அஜித் படம் போல் இல்லாமல், வித்தியாசமாக இருந்ததால் இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தன.

இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளதுடன், விடாமுயற்சி திரைப்படம் நான்கு நாட்களில் 100 கோடியை வசூலித்து உள்ளது. ஆனால் அஜித்தின் படத்திற்கு இந்த வசூல் மிகவும் குறைவானது.

படம் வெளியான இரண்டு, மூன்று நாட்கள் மட்டும்தான் படம் பிஸியாக இருந்தது. திங்கட்கிழமை முதல் படத்தின் வசூல் மோசமாக உள்ளது வருத்தம் அளிக்கிறது.

விடாமுயற்சி படம் அஜித் நடிப்பதற்கான திரைப்படமே இல்லை. அஜித் ஒரு மாஸ் ஹீரோ, அஜித் எப்படி இந்த கதையை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை.

இந்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதற்கே பல பிரச்சனைகள், தடைகள் இருந்த போதும், ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார்கள். மக்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகன், எப்படி ஒரு சாதாரணமான படத்தில் நடித்தார் என்று தெரியவில்லை.

விடாமுயற்சி படத்தின் முதல் 50 நிமிடம் மிகவும் தொய்வாகத்தான் செல்கிறது. த்ரிஷா, அஜித்துடன் 12 ஆண்டுகள் வாழ்த்துவிட்டு, வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்லிவிட்டு போகிறார். இது நம் கலாசாரத்திற்கு ஒத்துவராத கதை.

படத்தில் வருவான் போகிறவன் எல்லாம், அஜித்தை அடிப்பதை எப்படி அஜித்தின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். படம் எடுபடவில்லை.

சந்திரமுகி 2, லால்சலாம், இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி என லைகா நிறுவனம் எடுத்த அனைத்து படங்களும் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. எல்லா திரைப்படமும் தோல்வி என்றார் யாரை குற்றம் சொல்வது.

விடாமுயற்சி படத்திலேயே லைகா நிறுவனத்திற்கு 150 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விடாமுயற்சி 150 கோடியை தாண்டுவதே கஷ்டம் தான்.

தொடர்ந்து பல கோடி நஷ்டம் வரும் போது சமாளிப்பது கஷ்டம். தற்போது லைகா நிறுவனம் விஜய்யின் மகன் இயக்கும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால், இப்போது இருக்கும் சூழ்நிலையில் அந்த படம் எடுக்கப்படுமா இல்லையா என்பது லைகா நிறுவனத்திற்கே தெரியாது என்று பாலாஜி பிரபு அந்த பேட்டியில் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories