Sunday, March 9, 2025
Homeஉலகம்ஜெர்மனியில் விரைவு ரயிலுடன் லாரி மோதியதில் ஒருவர் பலி

ஜெர்மனியில் விரைவு ரயிலுடன் லாரி மோதியதில் ஒருவர் பலி

ஜெர்மனியின் Hamburg நகரில் விரைவு ரயிலுடன் லாரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 6 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

Bremen நகருக்குச் செல்லும் வழியின் தண்டவாளச் சாலை சந்திப்பில் பிப்ரவரி 11 ஆம் தேதி ஜெர்மன் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இந்த விபத்து நடந்தது.

நகரங்களுக்கு இடையிலான அந்த விரைவு ரயிலில் சுமார் 300 பேர் பயணம் செய்த நிலையில், விபத்து குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories