நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், இதுவரை 131 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டிவி ஒளிபரப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளதுடன், விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து, வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தான்டு அன்று விடாமுயற்சி திரைப்படத்தை சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.