இயக்குநர் சீமான் இயக்கத்தில் மாதவன் மற்றும் பாவனா நடித்த வாழ்த்துகள் படத்தில் ஒரு ஆங்கில வார்த்தை கூட பயன்படுத்தவில்லை என நடிகை சவிதா ரெட்டி கூறியிருக்கிறார்.
வாழ்த்துகள் படத்திற்கு டப்பிங் பேசும் போது இந்தப் படத்தில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் இல்லை.
டப்பிங் தொடங்கும் போது டயலாக் பேப்பர் கொடுத்தார்கள். நான் ரெடியா டேக் போகலாமா என்று கேட்டேன். அதற்கு தயார் என்று உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது.
வணக்கம் செல்வி சவிதா என்று சொன்னது யார் என்று திரும்பி பார்த்தேன். அது சீமான். தொடர்ந்து Recording Take என்று சொல்வதற்கு பதிலாக ஒலி பொறியாளர் பதிவு என்று குரல் கொடுத்தார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்று அனைவருமே தமிழில் பேச எனக்கு வியப்பாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.