நடிகர் நாக சைதன்யா முதல் மனைவியான நடிகை சமந்தாவை விவாகரத்து செய்ததால் குற்றவாளியைப் போல் நடத்தப்படுவதாக கூறி வேதனை வெளியிட்டுள்ளார்.
நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்த நிலையில், 4 ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்ததுடன், அதன் பின்னர் நடிகை சோபிதாவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார்.
இதனையடுத்து, சமூக ஊடகங்களில் சோபிதா, நாக சைதன்யாவை சமந்தாவின் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
இதுகுறித்து நாக சைதன்யா தெரிவிக்கையில், சமந்தாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை நூறும் முறை யோசித்துதான் எடுத்தேன். அது நடந்து தற்போது பல வருடங்கள் ஆகிவிட்டது.
ஆனதல், நான் இன்னும் குற்றவாளியைப் போல் நடத்தப்படுகிறேன். இது என்னை மிகவும் புண்படுத்துகிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.