ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்த ஆயிஷா, பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டார். பின்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான உப்பு புளி காரம் வெப் தொடரில் நடித்தார்.
இந்த நிலையில், புதிய படம் ஒன்றில் ஆயிஷா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குநர் ஜாபர் இந்த படத்தை இயக்க மறைந்த நடிகர் ரகுவரன் சகோதரர் ரமேஷ், புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
அஜித்தின் விடாமுயற்சி, இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன் ஆயிஷாவிற்கு ஜோடியாக நாயகனாக நடிக்கிறாராம்.