அமெரிக்காவில் Tiktok செயலி மீண்டும் அதன் சேவைகளை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப், தாம் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்கர்கள் TikTok சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அவரது முயற்சிகளால் அமெரிக்காவில் மீண்டும் சேவைகளை முன்னெடுப்பதாக TikTok அறிவித்துள்ளது.
170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் TikTok சேவையை பயன்படுத்துவதுடன், 7 மில்லியனுக்கும் அதிகமான சிறிய வரத்தகங்கள் அதனால் பயன்பெறுகின்றனர்.
தாம் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு TikTok தடையிலிருந்து விலக்கு அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் டிரம்ப் கூறியுள்ளார்.