TikTok செயலியைத் தடை செய்வதற்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
தேசப் பாதுகாப்புக்கு TikTok ஆபத்து என்று நீதிமன்றத் தீர்ப்பு சொல்வதுடன், அமெரிக்க மக்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் TikTok செயலியை பயன்படுத்துகின்றனர்.
சீனாவின் ByteDance நிறுவனம் நாளைக்குள் (19 ) TikTok நிறுவனத்தை விற்பனை செய்யவில்லை என்றால், தடை நடைமுறைக்கு வருவதுடன், அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடுத்த அரசாங்கத்தின் பொறுப்பு என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள நிலையில், டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (20) அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.
அவர் நினைத்தால் TikTokஐ விற்பதற்கு 90 நாள்வரை அவகாசம் வழங்க முடியும் என்ற நிலையில், விரைவில் முடிவு சொல்லப் போவதாகத் டிரம்ப் தெரிவித்து இருக்கின்றார்.