ஆளும் மிதவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்குப் போட்டியிட எண்ணுவதாக கனடா அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலண்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் அடுத்த பிரதமராக விரும்புவதாகவும் அவர் தம்முடைய சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ பதவி விலகியதுடன், துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஃப்ரீலண்ட், கடந்த மாதம் பதவி விலகினார்.
அத்துடன், ட்ரூடோவை வெளிப்படையாகக் குறைகூறிய ஃப்ரீலண்ட், டோனல்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும்போது ட்ரூடோவால் அதனை சமாளிக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, அமெரிக்க மற்றும் கனடாவுக்கு இடையில் வர்த்தகப் பூசல் அதிகரிக்கலாம் என்ற நிலையில், டிரம்ப்புடன் ஃப்ரீலண்ட்டின் உறவு எப்படி இருக்கும் என்பது தெளிவில்லை.