ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக 7ஆவது இடத்திலிருந்த தீக்சன, 663 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் வீரர் ரஷீத் கான் முதலிடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.