Saturday, April 19, 2025
Homeஉலகம்கனடாகனடா பிரதமர் ட்ரூடோ விரைவில் பதவி விலகலாம்

கனடா பிரதமர் ட்ரூடோ விரைவில் பதவி விலகலாம்

கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ விரைவில் பதவி விலகுவார் என்றும் 8 ஜனவரி தேசிய மிதவாதக் கட்சி கூடுவதற்குள் அறிவிப்பு வந்துவிடலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கட்சிக்குப் புதிய தலைவர் கிடைக்கும் வரை ட்ரூடோ தற்காலிகமாகப் பதவியில் நீடிப்பாரா என்பது தெரியவில்லை.

2015இல் பதவிக்கு வந்த ட்ரூடோ விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் பணவீக்கம் முதலியவற்றால் அண்மைக் காலத்தில் மக்களின் ஆதரவை இழந்துள்ளார்.

இந்நிலையில் ட்ரூடோ பதவி விலக நெருக்குதல் கூடியுள்ளதுடன், கனடாவில் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

ட்ரூடோ பதவி விலகினால் தேர்தல் விரைவாக நடத்தப்படும் சாத்தியம் அதிகம் உள்ளதுடன், அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் டிரம்ப்பின் நிர்வாகத்தைச் சமாளிக்கக் கனடா புதிய நிர்வாகத்தை அமைக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்

Latest Stories

Tranding Stories