ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் 84 ரன்னிலும் ஜடேஜா 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இந்தியா பால் ஆனை தவிர்க்க போராடியது.
கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா- ஆகாஷ் தீப் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் பாலோ ஆனை தவிர்க்க 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆகாஷ் தீப், தேர்ட் மேன் திசையில் பந்தை அடித்த நிலையில், அது பவுண்டரியாக மாறியது.
இதனால், இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்ததால், ஓய்வு அறையில் இருந்த கவுதம் கம்பீர், விராட் கோலி சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். பாலோ ஆனை தவிர்க்கவில்லை என்றால் ஆஸ்திரேலியா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைக்கும்.
இதனால் ஒரு நாள் முடிவில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது ஆஸ்திரேலியாவுக்கு பெரிய விஷயாமாக இருக்காது. இப்போது பாலோ ஆனை தவிர்த்ததால் கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணி தான் பேட்டிங் செய்யும். இதனால் ஆட்டம் டிராவை நோக்கி செல்லும்.
வெளிச்சமின்மை காரணமாக 4ஆவது நாள் போட்டி முடிவுக்கு வந்ததுடன், வெளியில் வந்த பும்ரா- ஆகாஷ் தீப்புக்கு சக வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.